

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தொடர் புடைய மேலும் 3 பேரை பிப்ர வரி 6-ம் தேதி வரை சிபிசிஐடி போலீஸ் காவலில் வைத்து விசா ரிக்க விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றம் நேற்று அனுமதி யளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே பங்காரத்தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 பேரும் கடந்த 23-ம் தேதி மர்ம மான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களைக் கடந்த ஜன.23-ம் தேதி மாலை அங் குள்ள கிணற்றில் இருந்து சின்ன சேலம் போலீஸார் மீட்டனர். இதற்கிடையே, மாணவிகள் உயிரி ழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தர விட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி கடந்த சனிக்கிழமை விசாரணை பொறுப்பை ஏற்றார். அவரிடம் வழக்கு ஆவணங்களை சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஒப்படைத்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி தாளாளர் வாசுகியைக் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் மனு அளித் தனர். அதையடுத்து, நேற்று முன்தினம் முதல் வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை சிபிசிஐடி போலீஸார் தங்கள் காவலில் வைத்து வாசுகியை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதுபோல, இந்த வழக்கில் கைதாகியுள்ள வாசுகியின் மகன் சுவாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு வெங்கடேசன் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மனு தாக்கல் செய்தார். எனவே, அவர்கள் 3 பேரும் விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் நேற்று போலீ ஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 3 பேரையும் வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை சிபிசிஐடி போலீஸார் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டார்.
இடமாற்றம் செய்ய வழக்கு
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவர்களை சென்னையில் உள்ள அரும்பாக்கம் அரசு யோகா கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென அக்கல்லூரி மாண வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப் பையா முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. இதுகுறித்து 2 வாரத்தில் அரசு தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.