

தமிழக அமைச்சரவையில் இருந்து பால் வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா நீக்கப் பட்டுள்ளார். அவரது அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட் டுள்ளது.
தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் பி.வி.ரமணா. இவர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தார். 2 நாட்களுக்கு முன்பு, ரமணா தொடர்பான புகைப்படம் ஒன்று ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
சட்டப்பேரவை கூட்டம் நேற்று பிற்பகல் முடிந்தது. இந்நிலையில், அமைச் சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை திடீரென அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆளு நரின் செயலாளர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பால்வளத் துறை அமைச்சர் பதவியில் இருந்து பி.வி.ரமணாவை நீக்குவது தொடர் பான பரிந்துரை ஏற்கப்பட்டு, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார். முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஊரக தொழில் துறை மற்றும் தொழி லாளர் நலத் துறை அமைச்சர் பி.மோக னிடம் பால்வளத் துறை கூடுதலாக ஒப்படைக்கப்படுகிறது’ என தெரிவித் துள்ளார்.
கட்சிப் பதவியும் பறிப்பு
அமைச்சரவையில் இருந்து நீக்கப் பட்ட நிலையில், பி.வி.ரமணா வின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து பி.வி.ரமணா விடுவிக்கப் படுகிறார். வேறு ஒருவர் நியமிக் கப்படும் வரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கூடுதலாக கட்சிப் பணிகளை மேற்கொள்வார்’ என கூறப்பட்டுள்ளது.
பி.வி.ரமணா, ஏற்கெனவே ஒருமுறை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார். இப்போது 2-வது முறையாக அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அமைச்சரவை 23 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 முறை அமைச்சர்கள் மறைவால் மாற்றப்பட்டது.