குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து பப்ஜி மதன் வழக்கு

குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து பப்ஜி மதன் வழக்கு
Updated on
1 min read

யூ டியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை (ஆக.9)விசாரணைக்கு வரவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in