

*
தமிழக வெள்ளத்துக்கு மழை மட்டும் காரணமல்ல. அரசு விரை வாக செயல்பட்டிருந்தால் வெள் ளத்தை தடுத்திருக்கலாம் என மத்திய புவி அறிவியல் அமைச்ச கம் தனது அறிக்கையில் தெரி வித்துள்ளது.
தமிழக வெள்ள பாதிப்பு தொடர் பாக மத்திய புவி அறிவியல் துறையின் விஞ்ஞானிகள், அதி காரிகளைக் கொண்ட குழு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பேரிடர் வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு அதிகப்படியான மழை தொடர்பான எச்சரிக்கை தமிழகத்துக்கு விடுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு விரைவாக செயல்பட்டிருந்தால், இந்த வெள்ளத்தை தடுத்திருக்கலாம்’ என கூறியுள்ளது.
கடந்த ஆண்டுக்கான பருவ நிலை தொடர்பான அறிக்கையில், சென்னை வெள்ள பாதிப்புகளும் இடம் பெற்றுள்ளது. அதில், மழை மற்றும் செம்பரம்பாக்கத்தில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விட்டதுதான் சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக புவி அறிவியல் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நீர்நிலைகளில் இருந்து வெளி யேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட நீர், மாநகரில் உள்ள கழிவுநீரகற்று அமைப்பு இத்தகைய சூழலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படாதது போன்றவைதான் சென்னை வெள் ளத்துக்கு காரணம். தண்ணீரால் சூழப்பட்ட தெருக்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய சூழ லில், அதிகப்படியான வெள்ள நீர் வந்து அவர்களை தாக்கியுள்ளது. அது மழை நீரால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதால் இதை அரசு தடுத்திருக்கலாம்.
காஷ்மீர் வெள்ளம் என்பது, பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியேறிய அதிகப்படியான நீர், குறுகிய நீர்வழிப்பாதைகளால் தடுக்கப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியேறியதால் ஏற்பட்டது. ஆனால், சென்னையைப் பொறுத்த வரை 48 மணி நேரத்துக்கு முன்ன தாகவே அதிகப்படியான மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு முன்னறிவிப்பு அளிக்கப்பட்டது.
இதை கருத்தில்கொண்டு வெள்ளத்தை கணித்து உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டிருந்தால், பொதுமக்களை எச்சரித்து வெளி யேற்றியிருக்கலாம். இது போன்ற பேரிடர்களை கையாள, இனியாவது நமது நகரங்களில் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பாக கடற்கரை மற்றும் ஆற்றங் கரையோர பகுதிகளில், கழிவு நீர் கால்வாய்களில் உள்ள பிரச் சினைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், முறையான நகர்ப் புற திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
‘டிசம்பர் 1-ம் தேதி ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய் யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதே தவிர, 50 செ.மீ. மழை பெய்யும் என தெரி விக்கவில்லை. எனவே, சென்னை யில் வெள்ளப்பெருக்கு என்பது, மிகவும் அரிதான ஒரு தேசிய பேரிடர். நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதில் எவ்வித தவறும் நடக்கவில்லை’ என்று தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் விளக்கம் அளித்திருந்தார்.