Last Updated : 07 Aug, 2021 03:17 AM

 

Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் சிறுத்தை.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. அதோடு, இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், ராஜநாகங்கள், புள்ளிமான்கள், கரடி என ஏராளமான வனவிலங்கு கள் உள்ளன.

சமீபத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் பற்றி கணக்கெடுக்க வனத்தின் பல்வேறு பகுதிகளில் நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். இந்த கேமராக்களில் பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டது. இதில் சிறுத்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சரணாலயப் பகுதியில் 908-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள மற்ற சரணாலயங்களைவிட மிக அதிகம்.

2021-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சிறுத்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 2.11 சதவீதம் முதுமலை புலிகள் காப்பகத்திலும், 7.05 சதவீதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலும், 10.11சதவீதம் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்திலும், 20.43 சதவீதம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல்நிற அணில்கள் சரணாலயத்திலும் உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி, விலங்குகள் வாழ பாதுகாப்பான இடமாக உள்ளது. இங்கு அடிக்கடிகண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கவேட்டை தடுப்பு காவலர்களோடு சேர்ந்து அவ்வப்போது சோதனைநடத்துகிறோம். வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் விலங்குகளை மட்டுமன்றிசமூகவிரோதிகள் நடமாட்டத்தையும் கண்காணிக்கிறோம். சிறுத்தைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் இங்கு அபரிமிதமாக இருப்பதால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x