பிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமத கட்டணம் 2 ஆண்டுகளுக்கு ரத்து: சென்னையில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி

பிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமத கட்டணம் 2 ஆண்டுகளுக்கு ரத்து: சென்னையில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி
Updated on
1 min read

பிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமதக்கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யும் தமிழக அரசின் உத்தரவை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படி, ஒரு நபர் இறந்துவிட்டால் 21 நாட்களுக்குள் தொடர்புடைய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. 22-வது நாள் முதல் 30-வது நாளுக்குள் பதிவு செய்ய ரூ.100, 31-வது நாள் முதல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய ரூ.200, ஓராண்டுக்குமேல் ஆன பிறகு பதிவு செய்ய ரூ.500 என தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.

2 ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், வீடுகளில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகளை, தொடர்புடைய பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் அலுவலகத்துக்கு சென்று பொதுமக்களால் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு தாமத பதிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதற்கு மாநகராட்சி மன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in