

தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துநகை, பணத்தை கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மோகன் வடிவேல். இவர் கடந்த மாதம் 21-ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தபோது தனது வீட்டிலிருந்த 3 பவுன் நகை மற்றும்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையன் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார்என்பவரும் புகார் அளித்திருந்தார்.
அதன்படி வடபழனி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வீட்டிலும் கைவரிசை காட்டியது ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதில் பதிவான முகத்தை, பழைய குற்றவாளிகளின் படங்களோடு ஒப்பிட்டு வார்த்தபோது, திருட்டில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த அறிவழகன் (32) என்பது தெரியவந்தது. இவரை கைது செய்து விசாரித்த போது பழைய வழக்குகள் பற்றியபரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “2009-ம் ஆண்டு தர்மபுரி பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் அறிவழகன் அம்மாவட்ட காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்தார். பின்பு எம்பிஏ படிப்பதற்காக சென்னை வந்த இவர், சென்னை குமரன் நகர் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்டார்.
2017-ம் ஆண்டு மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கிண்டிபோலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, அறிவழகனின்செல்போனில் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்தன. அது பற்றிய விசாரணையில் இவர் தனியாக பெண்கள் வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்தப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அறிவழகன் 2019-ம்ஆண்டு சேலம் காவல் துறையாலும், 2020-ம் ஆண்டு அம்பத்தூர் காவல் துறையாலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த பின் அறிவழகன் வடபழனி பகுதிகளில் கைவரிசை காண்பித்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.