உயிர் காக்கும் 76 மருந்துகளுக்கான வரிச்சலுகையை ரத்து செய்வதா? - வாசன் கண்டனம்

உயிர் காக்கும் 76 மருந்துகளுக்கான வரிச்சலுகையை ரத்து செய்வதா? - வாசன் கண்டனம்
Updated on
1 min read

உயிர் காக்கும் 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் அதிக அளவு மருந்துகள் தயாரிக்கப்பட்டாலும் எச்.ஐ.வி., புற்றுநோய், ரத்தக்கசிவு போன்ற பல்வேறு நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்யுள்ளது.

இச்சூழலில் 76 வகை உயிர் காக்கும் மருந்துக்களுக்கான இறக்குமதி வரிச்சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இம்மருந்துகளின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்கள் இதனால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு ஒருபக்கம் அனைவருக்கும் சுகாதார திட்டம் என அறிவிக்கிறது. மறுபக்கம் உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரிச்சலுகையை ரத்து செய்கிறது. பொதுமக்களை ஏமாற்றும் இதுபோன்ற செயல் கண்டனத்துக்குரியது.

உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அதுவரை இம்மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகையை தொடர வேண்டும். 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in