Published : 06 Aug 2021 07:10 PM
Last Updated : 06 Aug 2021 07:10 PM

ஊரடங்கில் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?- முழு விவரம்

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட உத்தரவில், ’’இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனிக் கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துத் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

Ø கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

Ø கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

Ø அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

Ø கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

Ø மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முழுமையாகப் படிக்க: கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முழுமையாகப் படிக்க: வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை: முதல்வர் ஸ்டாலின்

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முழுமையாகப் படிக்க: செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுமையாகப் படிக்க: வீடுவீடாகக் கண்காணிக்கக் குழு; நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முழுமையாகப் படிக்க: ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x