தமிழகம், புதுவை சட்டப்பேரவை தேர்தல்: தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் குவிந்தன - பெண்கள், திருநங்கை உட்பட ஏராளமானோர் மனு அளித்தனர்

தமிழகம், புதுவை சட்டப்பேரவை தேர்தல்: தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் குவிந்தன - பெண்கள், திருநங்கை உட்பட ஏராளமானோர் மனு அளித்தனர்
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுவை சட்டப் பேரவை தேர்தலில் தேமுதிக சார் பில் போட்டியிட பெண்கள், திருநங்கை உட்பட ஏராளமான வர்கள் நேற்று விருப்பு மனுக்களை அளித்தனர்.

தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. அப்போது ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.

முதல் விருப்ப மனுவை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி முருகேந்திரன் என்னும் பெண் அளித்தார். திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

வேட்பு மனுக்களை தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப் புச் செயலாளர் சந்திரகுமார் உள் ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். சேலத்தை சேர்ந்த திருநங்கை ராதிகா தேமுதிக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அவர் கூறும்போது, ‘கடந்த தேர்தலில் கட்சித் தலைவர் விஜயகாந்துக்காக நான் வேட்பு மனு தாக்கல் செய் திருந்தேன். குடும்பம் ஏதுமின்றி தனி ஆளாகத்தான் உள்ளேன். எனவே, சேலம் மேற்கு தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றார்.

விஜயகாந்த், பிரேமலதா விஜய காந்த், சுதீஷ் உள்ளிட்டோருக்காக ஏராளமானவர்கள் விருப்ப மனுக் களை அளித்திருந்தனர். வரும் 14-ம் தேதி மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். தமிழக சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் வசூலிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in