ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து
Updated on
1 min read

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் ‘ரயில் ஆட்டோ ஹப்’ அமைக்கப்படும் என அறிவித் திருப்பது சர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்பதால் அதை வரவேற்கிறேன்.

டெல்லியில் இருந்து சென்னை வரை யிலான வடக்கு தெற்கு தனி சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கி றேன். இதையும், விஜயவாடாவுடன் முடிவடையும் கிழக்கு கடற்கரை சரக்கு பாதையையும் தூத்துக்குடி வரை நீட்டித்திருந்தால், தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியி ருக்கும்.

பயணிகள் வசதியை மேம்படுத் துவது, பெண்கள் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு தேவையான வசதி செய்து கொடுப்பது ஆகியவற்றை வரவேற்கிறேன். நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத் தப்படுவதற்கு நன்றி. ராமேசுவரம், ரங்கம் போன்ற பல்வேறு முக்கிய புனிதத் தலங்களில் உள்ள ரயில் நிலையங்களும் மேம்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் சென்னை புறநகர் ரயில் முனையங்களை மேம் படுத்துவதற்கான அறிவிப்பு வெளி யிடப்படாதது மிகப்பெரிய புறக் கணிப்பாகும்.

ரயில் கட்டணம் உயர்த்தாதது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டது.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in