

நான்காவது சென்னை சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழா சென்னையில் பிப்ரவரி 16 தொடங்கி 21-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
சமூக அவலங்கள் மற்றும் பதிவுகளைச் சொல்லும் ஆவண மற்றும் குறும்படங்களை கடந்த 20 வருடங்களாக இயக்கி திரையிட்டு வரும் மறுபக்கம் திரைப்பட இயக்கம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் 50 ஆவண மற்றும் குறும்படங்கள் திரை யிடப்படுகின்றன. முன்னதாக நாளை தி.நகர் எம்எம் ப்ரிவியூவ் திரையரங்கில் விழா முன் னோட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 16-ம் தேதி முதல் நாள் நிகழ்வுகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், இரண்டாம் நாள் விழா லயோலா கல்லூரியிலும், மூன்றாம் நாள் விழா சென்னை பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகின்றன. 4 மற்றும் 5-ம் நாள் விழாக்கள் பெரியார் திடலிலும், நிறைவு நாள் விழா கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸிலும் நடைபெறுகின்றன.
இந்த விழாவில் இந்திய படங்களோடு ரஷ்யா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்தி ரேலியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளின் ஆவண மற்றும் குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.