தேர்தல் ஆணையர்கள் நாளை சென்னை வருகை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

தேர்தல் ஆணையர்கள் நாளை சென்னை வருகை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை
Updated on
1 min read

தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோ சனை நடத்தினார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங் களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாநில தேர்தல் அதிகாரி கள் செய்து வருகின்றனர். தமிழகத் தில், வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விடு பட்ட வாக்காளர்களை சேர்ப்பதற் கான முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி குறித்து ஆலோசிக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, ஆணையர்கள் ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் நாளை மாலை தமிழகம் வருகின்றனர். அப்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிகின்றனர். இதைத் தொடர்ந்து, 11-ம் தேதி தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதற்கிடையே, சென்னை உட் பட தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்துக் கட்சி கூட்டத்தை நேற்று நடத் தினர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டு அவற்றை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து,மாலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, காணொலி காட்சி மூலம், 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வாரியாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் பெறப்பட்ட தகவல்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

திமுக மனு

திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், நேற்று மாலை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார். அப்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 73 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக ஒரு மனுவையும் அதற்கான ஆதாரத்தையும் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in