Published : 26 Feb 2016 01:28 PM
Last Updated : 26 Feb 2016 01:28 PM

ரொட்டியிலும் ஜெ. ஸ்டிக்கர்!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டி நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அமர்க்களப்படுத்தினர்.

அதிமுக அரசு மீது ஸ்டிக்கர் விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், நீலகிரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடந்த விழாவில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

ஜெயலலிதா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாளன்று உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 4 கிராமில் தங்க சங்கிலியும், அங்குள்ள தாய்மார்களுக்கு ரொட்டி மற்றும் பிஸ்கெட்டும் கப்பச்சி வினோத் வழங்கினார்.

தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ரொட்டி மற்றும் பிஸ்கெட் பாக்கெட்களில் முதல்வர் பட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x