

மக்கள் நலக் கூட்டணி சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் நீடிக்கும் என்று ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட் டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில், மாற்று அரசியலுக்கான பிரச்சார பயணப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியபோது, “மக்கள் நலக் கூட்டணியில் இணைய அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் முன்வந்தால் சேர்த்துக்கொள்வோம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் பேசும்போது, “மாற்று ஆட்சி அமைய வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்பை இந்தக் கூட்டணி நிறைவேற்றும்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும் போது, “கொள்கை அடிப்படை யில் உருவான இக்கூட்டணி தேர்த லுக்குப் பிறகும் தொடரும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, “மக்கள் பிரச்சினைகளை திமுக, அதிமுகவால் தீர்க்கவும் முடியாது, அவர்களைத் திருத்தவும் முடி யாது என்ற முடிவுக்கு வந்த பிறகுதான், இந்த இயக்கத்தை கட்டமைத்தோம்” என்றார்.
மத்திய அரசே காரணம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் நேற்று செய்தியாளர் களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், விவசாயிகளுக்குப் பாதகமான இந்த திட்டத்துக்கு மத்திய அரசே காரணம் என்பது அம்பலமாகியுள்ளது” என்றார்.
ராமதாஸ் மீது அவதூறு வழக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறியபோது, “சித்த மருத் துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் இறந்த சம்பவத்தில் விடுதலை சிறுத் தைகள் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதை நிரூபிக்காவிட்டால், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடருவோம்” என்றார்.