

திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நமக்கு நாமே’ பயணத்தின் ஒரு பகுதியாக கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்றேன். அப்போது ஆந்திர சிறைகளில் வாடும் தங்களது உறவினர்களை மீட்க உதவுமாறு என்னிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று அவர்களை விடுவிக்க சட்ட நடலவடிக்கைகளை எடுக்குமாறு திமுக வழக்கறிஞர் அணிக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் கண்ணதாசன் தலைமையில் 24 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களின் முயற்சியில் 288 தமிழர்களை திருப்பதி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்காக பாடுபட்ட திமுக வழக்கறிஞர் அணியினருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்,