

ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணத்தால் புதிய எழுச்சி ஏற்பட்டிருப்பதுடன் அனைத்து தரப்பு மக்களும் திமுகவை ஆதரிக்க முன்வந்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு நேற்று அவர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரியில் ஸ்டாலின் தொடங்கிய ‘நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்’, பிப்ரவரி 12-ம் தேதி சென்னை தியாகராயநகரில் நிறைவடைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் அனைத்து தரப்பு மக் களின் கோரிக்கைகளையும், குறைகளையும் அவர் கேட்டிருக் கிறார்.
‘நமக்கு நாமே’ பயணத்தைப் பற்றிய செய்தி, தமிழக மக்களிடம் பரவி, ஆளுங்கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்தத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதி களிலும் ஸ்டாலின் மேற்கொண்ட பயணம், கட்சித் தொண்டர் களிடையே எழுச்சியையும் மக்க ளிடையே நம்பிக்கை கலந்த விழிப் புணர்ச்சியையும், நடுநிலையாளர் கள் இடையே நல்லெண்ணத்தை யும், எதிர்கட்சியினரிடையே மருட்சியையும், ஊடகத்தாரி டையே ஆக்கப்பூர்வமான ஆர்வத் தையும் எதிர்பார்ப்பையும் ஏற் படுத்தியுள்ளது.
‘நமக்கு நாமே’ என்ற பெயரே அனைவரின் இல்லங்களிலும் இரண்டறக் கலந்துவிட்ட சொல் லாகி இருக்கிறது. ஸ்டாலினின் இந்த வெற்றிப்பயணம், திமுக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம். அவரின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல் கல்.
ஆதரவு அளிக்க...
திமுக தற்போது பெற்றுள்ள எழுச்சிக்கு, அதிமுக ஆட்சியாளர் களின் அடுத்தடுத்த தவறுகள் காரணம் என்றாலும், ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தின் கார ணமாக அனைத்து தரப்பு மக்களும் திமுக மீது பாசமும், நேசமும் கொண்டு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இத்தகைய எழுச்சிக்கு காரணமாகவும், துணை யாகவும் இருந்த ஸ்டாலினை மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த் துகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.