

வேலூர் விஐடி பல்கலைக்கழகமும், ‘தி இந்து’ யங் வேர்ல்டும் இணைந்து சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி யில் விநாடி-வினா போட்டியை வியாழக்கிழமை நடத்தின.
4 முதல் 6-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டியில் (ஜூனியர் நிலை) 241 அணிகளும், 7 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக் கான போட்டியில் (சீனியர் நிலை) 271 அணிகளும் கலந்துகொண்டன. இந்த விநாடி வினா போட்டியை முன்னின்று நடத்திய வி.வி.ரம ணன், பொது அறிவு, நடப்பு கால நிகழ்வுகள், கலை, அறிவி யல், வரலாறு, விளையாட்டு என பல்வேறு பிரிவுகளில் போட்டி யாளர்களிடம் கேள்விக்கணை களை தொடுத்தார்.
ஜூனியர், சீனியர் இரு பிரிவு களில் இருந்தும் தலா 6 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இறுதிப் போட்டியில் சீனியர் பிரிவில் புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதா, மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆகியோர் முதல் பரிசையும், சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஏ.ஆதர்ஷ், ஆக்யத் சிங் ஆகியோர் 2-வது பரிசையும் வென்றனர். இதேபோல், ஜூனியர் பிரிவில் சென்னை தி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவத்ஸ் கோபால், ஆர்.ஸ்ரீவத்ஸ் ஆகியோர் முதல் பரிசையும், காஞ்சிபுரம் எச்யூஎஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பிரணவ் மகேஷ், அஸ்வஜித் சிங் ஆகியோர் 2-ம் பரிசையும் வென்றனர்.
பரிசு, கோப்பை
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். அண்ணா ஆதர்ஸ் கல்லூரியின் முதல்வர் ஜெயஸ்ரீ கோஷ் வாழ்த்திப் பேசினார்.
இந்த விநாடி வினா நிகழ்ச் சிக்கு ‘தி இந்து’ யங் வேர்ல்டு உடன் இணைந்து விஐடி பல்கலைக் கழகம், பயர்பாக்ஸ் லிங் பென்ஸ், அண்ணா ஆதர்ஸ் மகளிர் கல்லூரி, கொக்யோ கேம்ளின் ஆகியவை ஸ்பான்சர் செய்திருந்தன.