தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

கோவை, நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 3-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4, 5, 6-ம் தேதிகளில் இப்பகுதிகள் மட்டுமின்றி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in