Published : 03 Aug 2021 03:15 am

Updated : 03 Aug 2021 07:39 am

 

Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 07:39 AM

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பில்லை: ஆக.15-க்கு பிறகு ஆளுநர், முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு

schools-colleges-not-reopening-in-puducherry
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பில்லை. ஆகஸ்ட் 15-க்கு பிறகு ஆளுநர், முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள் ளார்.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி கள் திறப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்வித்துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை இயக் குநர் ருத்ரகவுடு உட்பட பலர் பங்கேற்றனர்.


பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:

புதுச்சேரியில் மூன்றாவது அலை எப்போது உறுதியாகும் எனதெரியவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மூன்று குழந் தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் வரும் 11-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தடுப்பூசி போட்ட பிறகே கல்லூரிகள் திறக்க முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் களில் 85 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளோரும் தடுப்பூசி போடவேண்டும்.

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டுஆகஸ்ட் 15-க்கு பிறகு ஆளுநர்,முதல்வருடன் கலந்து ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும். தற் போதைக்கு பள்ளி கல்லூரி திறப்பு இல்லை. மூன்றாவது அலையை பொறுத்து பிறகு திறக்கப்படலாம். தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் அரசின் உத்தரவை மீறி கூடுதலாக கட்டுமாறு கூறுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டணம் தொடர்பாக கண்காணிக்க குழு அமைப்போம். பெற்றோர் புகார் தர கல்வித் துறையில் தனி புகார் எண் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


புதுச்சேரிபள்ளி கல்லூரிகள்அமைச்சர் நமச்சிவாயம்தடுப்பூசி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x