Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

ராமேசுவரத்தில் இருந்து 'சீ சிக்கன்' என்ற பெயரில் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பலூன் மீன்கள்

ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்து 'சீ சிக்கன்' என்ற பெயரில் பலூன் மீன்கள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாட்டின் மிக நீண்ட கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் மீன் பிடிப்பதற்கும், கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது.

இங்கு மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பதப்படுத்தப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுபோல ராமேசுவரம் கடலோரப் பகுதிகளிலிருந்து 'சீ சிக்கன்' என்ற பலூன் மீன்கள் சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

இது குறித்து பாம்பன் மீன் வியாபாரி பாபு கூறியதாவது: பலூன் மீன்கள் தமிழகத்தின் வங்களா விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய கடல்களின் ஆழம் குறைந்த பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. பலூன் மீன்கள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள காற்றைக் கொண்டு தனது உடலை பல மடங்கு ஊதிப்பெருக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் எதிரிகளிடம் இருந்து எளிதாகத் தப்பும்.

மாமிசப் புரதங்களில் மிகச் சிறந்தது மீன் புரதம் என்பதால் `சீ சிக்கன்' என்ற பெயரில் பிரபலமாகி உள்ள பலூன் மீன்களை ராமேசுவரம் பகுதி மீனவர் களிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து சுத்தம் செய்த நிலையில் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர், தமிழகத்தில் இந்த மீன்கள் உணவாகப் பயன்படுவதில்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x