அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் எங்கே?- 11 ஆண்டுகளாக தேடும் கலப்பு திருமண தம்பதி

அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் எங்கே?- 11 ஆண்டுகளாக தேடும் கலப்பு திருமண தம்பதி
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே வடக்கு வெங்காநல்லூரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி தில்சாத்பேகம். கலப்புத் திருமணம் செய்த இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2010-ல் இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அரசு வழங்கியது.

ஆனால், பட்டா வழங்கப்பட்ட இடம் எது என தெரியவில்லை. நிலத்தை அளவீடு செய்து அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர், வட்டாட் சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் நடவ டிக்கை எடுக்கப் படவில்லை.

இந்நிலையில், அரசு வழங்கிய வீட்டுமனைப் பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளி த்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், இலவச பட்டா வுக்கான இடத்தை முறைப்படி அளவீடு செய்து தராமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in