பிப். 16-ல் இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

பிப். 16-ல் இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
Updated on
2 min read

14-வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத் தொடர்

*

தமிழக சட்டப்பேரவை, வரும் 16-ம் தேதி மீண்டும் கூடுகிறது. அன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதை யடுத்து 14-வது சட்டப்பேரவை பதவியேற்றது. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளில் 11 முறை சட்டப்பேரவை கூடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத் திலும் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பேரவை கூடவேண்டும் என்ற அடிப்படையில், மீண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரை யாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதிலளித்து 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க வேண்டும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை வரும் 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய் கிறார். 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பேரவைக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ, அலுவல் ஆய்வுக் குழு கூடி, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். இடைக்கால பட்ஜெட் மீது 3 அல்லது 4 நாட்கள் விவாதம் நடக்க வாய்ப்புள்ளதாக தலை மைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரும்பாலும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பில்லை. ஆனால், தேர்தல் நெருங்குவதால் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிடலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தேர்தல் நெருங்குவதால் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக குரலெழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தேமுதிக எம்எல்ஏக்கள்?

கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவைக் காவலர் களை தாக்கியதாக தேமுதிக எம்எல்ஏக்கள் மோகன்ராஜ், சந்தி ரகுமார், வெங்கடேசன், பார்த்திபன், தினகரன், சேகர் ஆகிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் 10 நாட்கள் வரை அவர்கள் பங்கேற்க தடை விதிக் கப்பட்டது.

ஏற்கெனவே ஜனவரியில் நடந்த கூட்டத் தொடரில் 4 நாட்களும் அவர்கள் பங்கேற்கவில்லை. இடைக்கால பட்ஜெட் கூட்டமும் 4 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளதால், அவர்கள் இதிலும் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in