

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படு கிறது.
மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம்செழிக்கும் என்பதை கருத்தில்கொண்டு, தாய்க்கும்-சேய்க்கும் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் தமிழகஅரசு கவனம் செலுத்தி வருகிறது.
குழந்தையின் முதல் 1,000 நாட்கள், அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே, அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த 1,000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தவறாது தாய்ப்பால் அளிக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். 6-வது மாதம் முதல் தாய்ப்பாலுடன், இணை உணவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.