

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் இருந்தும், முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் நகரெங்கும் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைத்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தவர். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடுவது வழக்கம். தற் போது முதல்வராக இருப்பதால் இம்முறை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு பரிசுகள், ரத்ததான முகாம் என பல்வேறு பணி களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்களின் உருவ படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு. ஆனால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப் பம் போல் திரைப்பட நடிகர்களின் உருவங்களில் பேனர்கள் அமைத்துவாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப் படத்தின் பாணியில் பேனர்களை வடிவமைப்பார்கள்.
இம்முறை 'சார்பட்டா பரம் பரை' திரைப்பட பாணியில் முதல்வர் ரங்கசாமியின் படங்களை பேனர்களில் வைக்கத் தொடங்கி யுள்ளனர். ஆர்யாவின் முகத்துக்குபதிலாக ரங்கசாமி படத்தையும், ரங்கன் வாத்தியார் என குறிப்பிட்டுகாமராஜர் படத்தையும் வைத்துள் ளனர். அத்துடன் சாலைகளில் வாழ்த்து வளைவுகளும் வைத்துள் ளனர். குறிப்பாக காமராஜர், நடிகர் சிவாஜி கணேசனின் படமும் குறிப்பிட்ட பேனர்களில் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரிமுதல்வருக்கு சினிமா நடிகர்கள்பாணியில் பேனர்கள் வைத்துள்ள னர். எந்த மாநிலத்திலும் இது போல் இல்லை. பொதுமக்கள் அவரை பார்க்கும்போது சினிமா நடிகரை போன்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. முதல்வர் இதைஏற்கிறாரா என்பதை தெளிவுப் படுத்த வேண்டும். மேலும், விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் 2009-ல் போஸ்டர், பேனர்கள் போன்றவை வைக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சித்துறையை வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினர்.