ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறை அமல்: தமிழக அரசு அறிவிப்பு

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறை அமல்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, இடைநிலை ஆசிரியர்களை பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், ‘வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது. இந்த முறை செல்லாது. ஒவ்வொன்றிலும் விண்ணப்பதாரர்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், ‘இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்விலும் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கட் ஆப் வந்தால்..

இந்த தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றால், வயதில் மூத்தவர்களுக்கு (பிறந்த தேதி அடிப்படையில்) முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்

கல்வித்தகுதி

வெயிட்டேஜ் மதிப்பெண்

கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்

மதிப்பெண்

பிளஸ்-2

15

P%

P*15/100

இடைநிலை ஆசிரியர் பயிற்சி

25

Q%

Q*25/100

ஆசிரியர் தகுதித்தேர்வு

60

R%

R*60/100

பட்டதாரி ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்

கல்வித்தகுதி

வெயிட்டேஜ் மதிப்பெண்

கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்

மதிப்பெண்

பிளஸ்-2

10

P%

P*10/100

பட்டப் படிப்பு

15

Q%

Q*15/100

பி.எட்.

15

R%

R*15/100

ஆசிரியர் தகுதித்தேர்வு

60

S%

S*60/100

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in