தமிழக மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக 700 பேருக்கு பதவி உயர்வு

தமிழக மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக 700 பேருக்கு பதவி உயர்வு
Updated on
1 min read

சென்னை: மின்​வாரி​யத்​தில் பணி​யாற்றி வந்த 700 உதவி பொறி​யாளர்​களுக்​கு, உதவி செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு மின்​வாரி​யத்​தில் பணி மூப்பு மற்​றும் தகுதி அடிப்​படை​யில் வெளிப்​படை​யான நிர்​வாக நடை​முறை​கள் தொடர்ந்து செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, மின்​வாரி​யத்​தில் பணி​யாற்றி வந்த 700 உதவி பொறி​யாளர்​களுக்கு உதவி செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஒரே நேரத்​தில் இவ்​வளவு பெரிய அளவில் பொறி​யாளர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இந்த பதவி உயர்​வின் மூலம், மின்​வாரி​யத்​தின் களப்​பணி​கள் மேலும் வலுப்​பெறு​வதுடன், எதிர்​வரும் பருவ மழைக்​காலங்​களில் மின் விநி​யோகம், பராமரிப்​பு உள்​ளிட்ட பணி​கள் கூடு​தல் திறனுட​னும், விரை​வாக​வும் மேற்​கொள்ள இயலும்.

இப்​ப​தவி உயர்வு பெற்​றுள்ள பொறி​யாளர்​கள், தமிழகத்​தின் மின் கட்​டமைப்பை மேலும் மேம்​படுத்​து​வ​தி​லும், பொது​மக்​களுக்கு தடையற்ற மற்​றும் தரமான மின் விநி​யோக சேவையை வழங்​கு​வ​தி​லும் முக்​கிய பங்​காற்​று​வார்கள். நீண்ட​கால​மாக நிலு​வை​யில் இருந்த பதவி உயர்வு மற்​றும் நிர்​வாக நடவடிக்​கைகள் அனைத்​தும் வெளிப்​படை​யான முறை​யில் விரைந்து மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​நட​வடிக்​கை, மின்​வாரி​யத்​தில் பணி​யாற்​றும் பொறி​யாளர்​களின் தொழில் முன்​னேற்​றத்தை உறுதி செய்​வதோடு, ஊழியர்​களின் மன உறு​தி​யை​யும், பணித் திறனை​யும் மேலும் உயர்த்​தும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டு உள்ளது.

தமிழக மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக 700 பேருக்கு பதவி உயர்வு
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in