சிவகாசி ஆலைகளில் 70 சதவீத பட்டாசுகள் விற்பனை: கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் நிம்மதி

சிவகாசி ஆலைகளில் 70 சதவீத பட்டாசுகள் விற்பனை: கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் நிம்மதி
Updated on: 
1 min read

சிவகாசி: சிவகாசி பட்​டாசு ஆலைகளில் தீபாவளி உற்​பத்தி நேற்​றுடன் நிறைவடைந்​தது. கடைசி நேரத்​தில் விற்​பனை சூடு பிடித்து 70 சதவீத பட்​டாசுகள் விற்​பனையானதால வியாபாரி​கள் நிம்​மதி அடைந்​துள்​ளனர்.

தீபாவளி பண்​டிகையை மைய​மாக வைத்து சிவகாசி பகுதி​யில் உள்ள 1,100-க்​கும் மேற்​பட்ட பட்​டாசு ஆலைகளில் ஆண்டு முழு​வதும் பட்​டாசு உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. நாட்​டின் மொத்​தத் தேவை​யில் 90 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பட்​டாசுகள் சிவகாசி​யில் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இந்த ஆண்டு தொடக்​கம் முதலில் ஏற்​பட்ட பட்​டாசு ஆலை வெடி விபத்​துகள் மற்​றும் பல்​வேறு கட்​டுப்​பாடுகள் காரண​மாக பட்​டாசு உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டது.

இரு மாதங்​களுக்கு முன் உரிமம் நிறுத்​திவைக்​கப்​பட்ட 300- க்​கும் மேற்​பட்ட பட்​டாசு ஆலைகள் மீதான நட​வடிக்கை விலக்​கிக் கொள்​ளப்​பட்​டதை அடுத்து அவற்​றில் உற்​பத்தி மும்​முர​மாக நடை​பெற்​றது. இறுதிக்​கட்​டப் பணிகள் முடிந்து உற்​பத்தி செய்​யப்​பட்ட பட்​டாசுகள் அனைத்​தும் விற்​பனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டதை அடுத்து, நேற்​றுடன் பட்​டாசு உற்​பத்தி நிறைவடைந்​தது.

சிவகாசி பகுதி​யில் உள்ள பட்​டாசுக் கடைகளில் ஆடிப்​பெருக்கு அன்று சிறப்பு பூஜைகளு​டன் தீபாவளி விற்​பனை தொடங்​கியது. விஜயதசமி தொடர் விடு​முறைக் காலத்​தில் பட்​டாசு விற்​பனை சூடு​பி​டித்த நிலை​யில், அதன்​பின் வெளியூர் மக்​கள் வருகை குறைந்​ததால் விற்​பனை மந்​த​மானது. இந்​நிலை​யில் நவம்​பர் மாதத் தொடக்​கம் முதலே வெளியூர் மக்​கள் வருகை அதி​கரித்து வரு​வ​தால் விற்​பனையாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இது குறித்து பட்​டாசு விற்​பனையாளர்​கள் கூறுகை​யில் “தமிழகத்​தில் விருதுநகர் மாவட்​டத்​தில் மட்​டுமே நிரந்​தர பட்​டாசு விற்​பனைக் கடைகள் மற்​றும் குடோன்​களுக்கு அனுமதி வழங்​கப்​படுவ​தால் மாநிலத்​தின் பல்​வேறு பகுதி​களைச் சேர்ந்​தோர் சிவகாசி​யில் பட்​டாசுக் கடைகள் தொடங்​கு​கின்​றனர். இத​னால் ஆண்​டுக்கு 500 முதல் 700 வரை புதிய கடைகளுக்கு அனுமதி வழங்​கப்​படு​கிறது.

கடைகள் எண்​ணிக்கை அதி​கரித்​தது மற்​றும் ஆன்​லைன் விற்​பனை காரண​மாக பட்​டாசு விற்​பனை குறைந்​துள்​ளது. கடைசி நேரத்​தில் விற்​பனை சூடு பிடித்​ததால் 70 சதவீத பட்​டாசுகள் விற்​பனையாகி​யுள்​ளன. இந்த ஆண்டு நவம்​பரில் தீபாவளி வரு​வ​தால் மாநிலத்​தின் பிற பகுதி​களில் விற்​பனை நன்​றாக இருக்​கும்“, என்​றனர்.

சிவகாசி ஆலைகளில் 70 சதவீத பட்டாசுகள் விற்பனை: கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் நிம்மதி
ஆந்திர கடற்பகுதியில் சென்னை மீனவர்கள் 5 பேர் சடலம் மீட்பு; 4 பேரை தேடும் பணி தீவிரம்

X