

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 22-ம் தேதி, மக நட்சத்திரத்தன்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திர தினம் வந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 122 கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அவரது பிறந்தநாளை முன் னிட்டு, தமிழகம் முழுவதும் 6,868 கோயில்களில் மரக்கன்று நடும் விழா இன்று நடக்கிறது.
உலக உயிர்களை காக்க இறைவன் ஆலகால நஞ்சை கண்டத்தில் அடக்கியதைப் போல, காற்றில் நிறைந்த கரியமில வாயு எனும் நஞ்சை மரங்கள் எடுத்துக்கொண்டு, சுவாசக் காற்றை தருகின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்த்தும் வண் ணம் கோயில்களில் தல விருட்சங்கள் தெய்வீக அம்சமாக வழிபடப்படுகின்றன. முக்கூறுகளை கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கொள்ளப்படுகிறது.
திருப்புனவாயில், திருப் புகலூர், திருவெண்ணை நல்லூர், திருவேட்டக்குடி ஆகிய சிவ தலங்களில் புன்னை மரம் தல விருட்சமாக உள்ளது. தோல் நோய்க்கு சிறந்த மருந்தாகவும் இது உள்ளது. மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி என பல பெயர்களில் மகிழ மரம் அழைக்கப்படுகிறது. மகிழ மரத்தின் பூக்கள் மாலை யாக தொடுக்கப்படுகிறது. மகிழ மரத்தின் சாறு, ஊது பத்தியில் மணம் சேர்க்க பயன்படுத்தப்படுகிறது.
வில்வ மரக்கன்று களை சைவ கோயில்களிலும், புன்னை மற்றும் மகிழம் கன்றுகளை வைணவ கோயில்களிலும் நடுவதற்கு அறநிலையத்துறை முடி வெடுத்துள்ளது. அதன்படி, முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான புதன்கிழமை (இன்று) 6,868 கோயில்களில் இம்மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.