

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இறந்த கோயில் காளைக்கு கண்ணீர் மல்க கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி அருகே செவரக்கோட்டை கருப்பர் கோயிலுக்கு கிராமமக்கள் சார்பில் நேர்த்திக்கடனாக காளை விடப்பட்டது. இக்காளைக்கு கிராமமக்கள் காய்கறிகள், பழங்கள், நெல் போன்றவற்றை உணவாக கொடுத்து தங்களது குழந்தை போல் வளர்த்து வந்தனர்.
அக்கோயில் காளையை சுற்று பகுதி மஞ்சுவிரட்டிற்கு அழைத்து சென்றனர். இக்காளை பிடிபடாமல் பல பரிசுகளை பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று வயது முதிர்வால் உயிரிழந்தது.
இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் இறந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காளையின் உடலை பாரம்பரிய முறைப்படி கொம்பு ஊதியும், கொட்டு அடித்தும் மாட்டு வண்டியில் வைத்து இளைஞர்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். பிறகு பெண்கள் குலவையிட்டு நல்லடக்கம் செய்துனர்.
காரைக்குடி அருகே செவரக்கோட்டை இறந்த கோயில் காளையை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக இழுத்து வந்த கிராம இளைஞர்கள்.