அதிமுக முன்னாள் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக முன்னாள் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்
Updated on
1 min read

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி கு.பரசுராமன் அக்கட்சியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டார்.

அதிமுக முன்னாள் எம்பியும்,அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தவருமான கு.பரசுராமன் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 29-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுகதலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை யின் விவரம்:

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கு.பரசுராமன், மன்றத்துணைத் தலைவர் கோ.ராஜமோகன், மன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஆர்.எம்.பாஸ்கர், நகர முன்னாள் செயலாளர் வி.பண்டரிநாதன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றியச் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் கே.அருள் சகாயகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in