Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

கரோனா தொற்று, காவேரி கூக்குரல் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சமூக வலைதளத்தில் உரை

கோவை

கர்நாடகாவைச் சேர்ந்த ஊடக மொன்று, ‘ஓபன் ஹவுஸ் வித் சத்குரு’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை கிளப் ஹவுஸ் செயலி மூலம் கடந்த 29-ம் தேதி ஏற்பாடு செய்தது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று ‘லைப் அண்ட் இட்ஸ் வேஸ்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கர்நாடக சட்டப்பேரவை தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, மக்களவை உறுப்பினர் சுமலதா அம்ப்ரீஷ், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர் பி.எல்.சங்கர், ‘கிளப் ஹவுஸ்’ ஆப்பின் சர்வதேச தலைவர் ஆர்த்தி ராம்மூர்த்தி, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத், சினிமா பிரபலங்கள் கீர்த்தி குமார், பிரியங்கா உபேந்தரா, ரக்‌ஷித் ஷெட்டி, பாடகர் விஜய் பிரகாஷ் உட்பட பல பிரபலங்கள் சத்குருவின் உரையை கேட்க அதில் இணைந்தனர்.

பொதுவாக, கிளப் ஹவுஸில் ஒரு ரூமில் அதிகபட்சமாக 8 ஆயிரம் பேர் மட்டுமே இணைய முடியும். சத்குரு பேச தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே அந்த ரூம் ஹவுஸ் முழுமையாக நிறைந்தது. இதையறிந்த கிளப் ஹவுஸ் பின்னர், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக 12 ஆயிரம் வரை அதிகரித்தது. இருந்தாலும் ஏராளமானோர் அந்த ரூமில் இணைய முடியவில்லை. இதன்மூலம், கிளப் ஹவுஸ் வரலாற்றில் இது புது சாதனையாக பதிவாகி உள்ளது. இந்நிகழ்வை விஸ்வவானி ஊடகத்தின் ஆசிரியர் விஸ்வேஷ்வர் பட் ஒருங்கிணைத்தார். இதில் கரோனா பெருந்தொற்று, ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ முறை, சமூக வலைதள கேலிகள், காவேரி கூக்குரல் திட்டத்தின் பணிகள், அரசியல் நடப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x