Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மையை நேசித்தவர் வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணா: பல்வேறு துறை பிரபலங்கள் புகழாரம்

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை நேசித்தவர் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியில், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. மூத்த வழக்கறிஞரான இவர், 92-வது வயதில் கடந்த மே 30-ம் தேதி காலமானார்.

இவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங், "நான் சி.ராமகிருஷ்ணாவின் பள்ளித் தோழன். இவரைஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் என்னை கோயிலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கோயில்கள் மீது மிகுந்த பற்று கொண்ட அவர், பல்வேறு கோயில்களை கட்ட உதவி செய்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார்" என்றார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.பி.கீதகிருஷ்ணன் பேசும்போது, "சி.ராமகிருஷ்ணா வேளாண் ஆராய்ச்சிக்காக அதிக நிலங்களை வழங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட இவர், 350 மர வகைகளை நட்டு வனச்சோலையை உருவாக்கினார்." என்றார்.

வனச்சோலை

‘தி இந்து' குழும பதிப்பாளர் என்.முரளி பேசும்போது, "ஜமீன் குடும்பத்தில் பிறந்த சி.ராமகிருஷ்ணா, வனச்சோலையை உருவாக்கிப் பராமரித்து வந்ததுடன், இயற்கை வேளாண்மையை நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார். இவர் 40 ஏக்கர் பரப்பில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த மா மரங்களையும் வளர்த்தார்" என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு பிரபலங்கள், அவருடன் பழகியவர்கள் பங்கேற்றுப் பேசினர். பொருளாதார பத்திரிகை ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன், ‘இந்து' என்.ராம் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x