Published : 01 Aug 2021 06:30 am

Updated : 01 Aug 2021 09:36 am

 

Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 09:36 AM

கால்வாய் ஓரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

minister-moorthy
மதுரை அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார் அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை

மதுரையில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பி.மூர்த்தி மக்களிடம் குறைகளைக் கேட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழகத்திலிருந்து கிடைக்கும் ஜிஎஸ்டி வரிப்பணத்தில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அதே நிலையில்தான் உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் செயல்பாட்டைக் குறை கூறி பாஜக போராட்டம் நடத்து கிறது. அவர்கள் எத்தகைய போராட்டம் நடத்தினாலும், அதை தமிழக அரசு சந்திக்கும்.

வைகை தண்ணீர் மூலம் பாசனம் நடக்கும் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை மேற்கொள்ள முடிய வில்லை. இதனால் கிராம மக் கள் பாதிக்கப்படாமல் இருக்க, கால்வாய் ஓரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 27% இட ஒதுக்கீட்டுக்காக அதிமுக எதையும் செய்யவில்லை. சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் திமுகதான்.

புகார் மனுக்கள் மீது நடவ டிக்கை எடுக்காவிட்டால் தன் னிடம் போனில் தெரிவிக்கலாம் என அறிவித்தவர் முதல்வர். அந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை யுடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று கரோனா பாதிப்பு 16 என்ற நிலையில் உள்ளது என்றார்.

ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா, ஒன்றியத் தலைவர் மணிமேகலை உட்பட பலர் கலந் துகொண்டனர்.


கால்வாய் ஓரங்களில் மரக்கன்றுகள்அமைச்சர் பி.மூர்த்திMinister moorthyதிமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x