அதிக மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழம் சீசன் கொடைக்கானலில் தொடங்கியது

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காய்த்துக் குலுங்கும் மலை அத்திப்பழங்கள்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காய்த்துக் குலுங்கும் மலை அத்திப்பழங்கள்.
Updated on
1 min read

கொடைக்கானலில் அதிக மருத் துவம் குணம் கொண்ட மலை அத்திப்பழம் சீசன் தொடங்கி யுள்ளது. அதிக விளைச்சல், லாபம் தரும் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, அடுக்கம், பெருமாள்மலை, பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட மலை அத்திப் பழம் விளைகிறது.

தற்போது பழங்கள் அதிக எண்ணிக்கையில் விளைந்துள் ளன. மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதன் தேவை அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தம், சர்க்கரையை கட்டுப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதிகளவில் கொடுக்கப்படுகிறது.

கடந்த வருடம் கரோனா முழு ஊரடங்கால் மலை அத்திப் பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அதிக விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் காய்த்துக் குலுங்குகின்றன. அதிக விளைச்சலுடன், விலையும் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை யாவதால் விவசாயிகள் மகிழ்ச் சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in