Published : 11 Feb 2016 08:12 AM
Last Updated : 11 Feb 2016 08:12 AM

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை: ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தலுக் கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறியவும் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரி சென்ற னர். அங்கு தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத் தினர்

பின்னர் நிருபர்களிடம் நசிம் ஜைதி கூறும்போது, “புதுச்சேரியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் இணையதளம் (Webcasting) மூலம் கண்காணிக்கப்படும். புதுச்சேரியில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கப்படு கிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

புதுச்சேரியில் ஆய்வை முடித்து விட்டு தேர்தல் ஆணையர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்களுடன் துணை தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா, தேர்தல் பயிற்சிப் பிரிவு தலைமை இயக்குநர் சுதீப் ஜெயின், ஊடகப் பிரிவு இயக்குநர் ஜிதேந்திர ஓஜா, செலவினப் பிரிவு இயக்குநர் ஸ்வைன் ஆகியோரும் வந்துள்ளனர்.

அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக நேற்று மாலை சந்தித்து கருத்துகளை கேட்டனர். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு கட்சிக்கு 10 நிமிடம் என்ற அடிப்படையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாஜக சார்பில் கே.எஸ்.நரேந் திரன், கே.டி.ராகவன், பகுஜன் சமாஜ் சார்பில் பாரதிதாசன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், கார்த்திக் மற்றும் ஜனார்த்தனன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் என்.பெரியசாமி, டி.என்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, பி.செல்வசிங், ஏ.பாக்கியம், எஸ்.ரமணி, காங்கிரஸ் சார்பில் ஜோதி மற்றும் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, முல்லை எத்திராஜ், மயில்சாமி, வெங்கடேஷ் மாணிக்கம் ஆகியோர் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தனர்.

அதேபோல அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், பழனி யப்பன், சேதுராமன், ஐ.எஸ்.இன்பதுரை, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங் கோவன், பரந்தாமன், நீலகண்டன், தேமுதிக சார்பில் ரவீந்திரன், கே.ஆர்.இளங்கோவன், வி.என்.ராஜன், செந்தாமரைக்கண்ணன், பாமக சார்பில் வேலு ஆகியோர் தனித்தனியாக தேர்தல் ஆணையர்களை சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

போலிகளை நீக்க வேண்டும்

பெரும்பாலான அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என ஆணையர்களிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தேமுதிக பிரதி நிதிகள் கூறும்போது, ‘‘தமிழகத் தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும். போலி வாக்காளர் களே இல்லை என்ற நிலையை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என எங்களது கருத்தை தெரிவித் தோம்’’ என்றனர்.

திமுக பிரதிநிதிகள் கூறும் போது, ‘51 தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள் ளது தொடர்பான பட்டியலை தேர்தல் ஆணையர்களிடம் அளித் துள்ளோம். மற்ற தொகுதிகளின் பட்டியலை விரைவில் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் அளிப் போம். இந்த போலி வாக்காளர் களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தினோம்’’ என்றனர்.

‘தேர்தலின்போது வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்ய மாட்டோம் என்ற எழுத்துபூர்வமான உறுதிமொழியை அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும் என வலியுறுத்தியதாக பாமக பிரதிநிதி தெரிவித்தார்.

இன்று காலை தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பிறகு டெல்லி செல்லும் அவர்கள், சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியி டுவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x