Published : 31 Jul 2021 10:48 PM
Last Updated : 31 Jul 2021 10:48 PM

துணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை: உயர் நீதிமன்றம் தடை

திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலக தரம் வாய்ந்த துணைக்கோள் நகரம் அமைக்க அரிஹந்த் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள கோவில் நிலம் மட்டுமல்லாமல் திருவாழி குட்டை மற்றும் அம்பாள் ஏரிக்களுக்கிடையே 60 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ராஜா மற்றும் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகளை தங்களுக்கு சொந்தம் எனக்கூறி தனியார் நிறுவனம் சாலை அமைக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

நீர் நிலைகளை வணிக பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதை கவனித்தில் கொள்ளாமல் அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், ஏரி மற்றும் கோவில் நிலத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி தமிழ் செல்வி அடங்கிய அமர்வு, ஏரிகள் மீது சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x