

நிலக்கரி கொள்முதலில் முறைகேடு ஈடுபட்டதாகக் கூறி, ஓய்வுபெறும் நாளில் டிஎன்பிஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கொள்முதல் பிரிவு முதன்மை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம். இவர் இன்று (ஜூலை 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அனுமதி பெறாமல் வெளியூர் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரக்கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அலுவலர் பாலகிருஷ்ணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காகித நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் நிலக்கரி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.