

‘‘ஸ்டார்ட் அப் தொழில் கொள் கையை உருவாக்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’’ என தொழில்துறை செயலாளர் கூறினார்.
இந்திய தொழிலக கூட்ட மைப்பு (சிஐஐ) ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது. சிஐஐ ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் அமைப் பின் தலைவர் ஆனந்த் பி.சுரானா வரவேற்புரை ஆற்றினார். சிஐஐ-யின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் எஸ்.என்.ஐசன்ஹோவர், முன்னாள் தலைவர்கள் அருண் ஜெயின், கோபால் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு தொழில் துறை செயலாளர் சி.வி.சங்கர் பேசியதாவது:
தமிழகம் முன்னோடி
ஸ்டார்ட் அப் தொழில் முனை வோர்களின் முன்னோடி மாநில மாக தமிழ்நாடு விளங்குகிறது. சிவகாசி, ஆம்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான தொழில் முனைவோர்கள் உள்ளனர். ஜெர்மனி மற்றும் ஐதராபாத் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஆப்செட் இயந்தி ரங்கள் சிவகாசியில் உள்ளன. ‘கேஷ் ஆன் டெலிவரி’ (பணத்தை பெற்றுக்கொண்டு பொருட்களை வீட்டிலேயே சப்ளை செய்வது) முறை இந்தியாவில்தான் முதன் முதலில் உருவானது. இதன் அடிப்படையில்தான் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் அந்நிய முதலீடு களை ஈர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் கூட தமிழக முதல்வர் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்கி வைத் தார். ஸ்டார்ட் அப் தொழில் கொள்கையை சில மாநிலங்கள் உருவாக்கியுள்ளன. தமிழக அரசும் இக்கொள்கையை உரு வாக்க திட்டமிட்டுள்ளது. இதற் காக தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் உள் ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தொழில் தொடங்க எளிமை யான முறைகளை பின்பற்றுவதற் கான ஒற்றைச் சாளர முறை, தடையில்லா மின்சாரம் வழங்கு தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கொள்கையில் இடம் பெறும்.
இவ்வாறு சங்கர் கூறினார்.