ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது: ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் - காஞ்சி ஆட்சியர் விவசாயிகளிடம் உறுதி

ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது: ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் - காஞ்சி ஆட்சியர் விவசாயிகளிடம் உறுதி
Updated on
1 min read

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்; ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள் ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச் சித்துறை அலுவலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலை மையில் விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலு வலர் சவுரிராஜன், வேளாண்துறை துணை இயக்குநர் சீதாராமன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பழையசீவரம் தனியார் சர்க்கரை ஆலையில் 2013-14ம் ஆண்டில் கரும்பு வழங்கியதற்கான நிலுவை தொகையில் ரூ.3 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் கரும்பு வழங்க உத்திரமேரூர் வட்ட கரும்பு விவசாயிகளை அனும திப்பது தொடர்பான விவகாரத் துக்கு, இதுவரை தீர்வு ஏற்பட வில்லை என புகார் தெரிவித்தனர்.

விவசாயத்துக்காக கூட்டு றவு வங்கியில் கடன் பெறும் விவசாயிகளிடம், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீட்டு தொகையை பிடித்தம் செய்யப் படுகிறது. ஆனால், கடந்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர் பாக மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, வேலூ ருக்கு 156 என்ற தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை, பாலுச்செட்டி சத்திரம் மற்றும் தாமல் ஆகிய கிராமங்களுக்கு உள்ளே செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல் கின்றன. இதனால், மேற்கண்ட கிராம மக்கள் நகரப் பகுதி பேருந் துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால், தாமல் மற்றும் பாலுச்செட்டிசத்திரம் கிராமத்தின் உள்ளே பேருந்துகள் இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி: ஏரி மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முடியவில்லை. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கடினமாக உழைக்கின்றனர். அதன் காரண மாகவே பல பகுதிகளில் ஏரி மற்றும் ஆறுகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளன. ஒரே நாளில் மாற் றத்தைக் கொண்டுவர முடியாது. படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

மேலும், தாமல் மற்றும் பாலுச்செட்டி சத்திரம் கிராமங்களில் மேற்கண்ட பேருந்துகள் செல்கிறதா என அதிகாரிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். கரும் புக்கான நிலுவை மற்றும் பயிர் காப்பீட்டு வழங்கப்படாதது குறித்து வேளாண்துறை துணை இயக்குநர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். இதில், இருதரப்பி னரிடையே கருத்துகள் கேட்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in