Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

சி.ராமகிருஷ்ணா நினைவு அஞ்சலி கூட்டம்: இணைய வழியில் இன்று நடக்கிறது

சி.ராமகிருஷ்ணா

சென்னை

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணாவின் நினைவு அஞ்சலிக் கூட்டம், இணைய வழியில் இன்று (ஜூலை 31) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் ஜமீன்குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. இவர் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். வேளாண்மையில் அதிக ஆர்வம்கொண்ட அவர், சி.சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த தேசியவேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கினார்.

பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் மரங்களைப் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள ஏதுவாக தனது நிலத்தில் 40 ஏக்கர்பரப்பளவில் வனச்சோலையை அமைத்தார். அதில் 350 மரவகைகளைக் கொண்ட 800 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சிறந்து விளங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைகளும், கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதியையும் வழங்கிஉள்ளார். உயர்நிலைப் பள்ளிக்காக 10 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளார். பிரம்மச்சர்ய வாழ்க்கையை கடைபிடித்த இவர், தனது 92-வது வயதில் கடந்த மே மாதம் உயிரிழந்தார்.

இவரது பணிகளை போற்றும் விதமாக, அவர் மீது அன்பு கொண்ட பிரபலங்கள் பலர் இணைய வழியில் பங்கேற்கும் நினைவு அஞ்சலிகூட்டம் இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் ஜூம் செயலி வழியாக கூட்ட அடையாள எண் - 82199210897, கடவுச்சொல் - 801026 ஆகியவற்றை பயன்படுத்தி கூட்டத்தில் இணையலாம். மேலும் விவரங்களுக்கு 9994443910 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x