நிதி நிலை சீரானதும் மகளிருக்கு ரூ.1000: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

நிதி நிலை சீரானதும் மகளிருக்கு ரூ.1000: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

Published on

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரூ.17.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தமிழக நிதிநிலையை விரைவில் சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். தனி அறையில் குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் உட்கார வைக்க வேண்டாம். வீட்டில் குழந்தைகளுக்கு தனிமையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in