

தமிழகத்தில் தஞ்சை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்கள் மிகவும் பதற்றமானவை என கள ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதிவிரைவு படை உதவி கமாண்டர் கே.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பதற்றமான பகுதிகள் தொடர்பான ஆய்வு நடைபெறுகிறது. இதற்காக தேனி மாவட்டத்துக்கு அதி விரைவு படை உதவி கமாண்டர் கே.வெங்கடேசன் தலைமையில் 60 பேர் கொண்ட அதிவிரைவு படையினர் (ஆர். ஏ.எப்.) வந்து சேர்ந்தனர்.
இது குறித்து கே.வெங்கடேசன் கூறியது: தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமு றை நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு ஜாதி, மத ரீதியாக கலவரம் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து கிராமம், நகரத்தின் பெயர் பட்டியலை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் காலங்களில் அந்த பட்டியலில் உள்ள பகுதிகளில் அதிவிரைவு படை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்படும்.
தேனி மாவட்டத்தில் ஒரு வாரம் கள ஆய்வு நடைபெறும். இதுவரை நடைபெற்ற கள ஆய்வின்படி திருவண்ணாமலை, ராமநாத புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பதற்றமானவை எனத் தெரிய வந்துள்ளது. தஞ் சாவூர், தூத்துக்குடி மாவட்டங்கள் மிகவும் பதற்றமானவையாகக் கருதப்படுகிறது என்றார்.