Last Updated : 25 Mar, 2014 12:00 AM

 

Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM

தினமும் புதுத் தலைவர்கள் சந்திப்பு; எடுப்பார் கைப்பிள்ளையா மு.க.அழகிரி?

மு.க.அழகிரியை தினமும் புதிது புதிதாக தலைவர்களும், ஒரே தொகுதியில் போட்டியிடும் இரு வேறு வேட்பாளர்களும் சந்தித்து ஆதரவு கேட்ட வண்ணம் உள்ளனர். இது எடுப்பார் கைப்பிள்ளையா அழகிரி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக.வில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக மேலிடம் எச்சரித்துள்ளது. ஆனால், அவர் திமுக.வில் இருந்து இதுவரை முழுமையாக வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை மதிமுக தலைவர் வைகோ வும், திங்கள்கிழமை பாஜக மாநில துணைத் தலைவரும் சிவ கங்கை மக்களவைத் தொகுதி வேட் பாளருமான ஹெச்.ராஜாவும் சந்தித் தனர். இதனிடையே, செவ்வாய்க் கிழமை காலை மு.க.அழகிரியைச் சந்திக்க மக்கள் விடுதலை கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் அனுமதி பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், “எங்கள் தேவேந்திரகுல வேளாளர் சமு தாயத்தைச் சேர்ந்த பெண்ணை தான் அழகிரி மணந்துள்ளார். எனவே, அவர் எங்கள் அக்கா கணவர். தற்போது அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிக ளுக்கு ஆளாகியுள்ள அத்தானை சந்தித்து ஆறுதல் கூறவும், உங்கள் பின்னால் இந்த சமுதாயம் இருக்கும் என்று நம்பிக்கை யூட்டவும் செல்கிறேன். அவர் கேட்டுக்கொண்டால், தென் காசி தொகுதியில் கிருஷ்ண சாமிக்கு எதிராக பிரச்சாரமும் செய் வேன்” என்றார்.

ஆக, கொள்கை அடிப்படையில் எந்தச் சம்பந்தமும் இல்லாத முரண் பட்ட பல தலைவர்கள் அழகிரியின் ஆதரவு கேட்டும், அவருக்கு ஆதரவு கொடுப்பதாகவும் படை யெடுத்து வருகின்றனர்.

“இது எங்கள் உட்கட்சி பிரச்சினை என்று சொல்லி அவர் களைத் திருப்பி அனுப்பி இருந் தால், திமுக.வினர் மகிழ்ந்திருப்பர். அவ்வாறு செய்யாமல், யார் வந்து பாராட்டினாலும் மகிழும் எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டார் அழகிரி” என்று மதுரை திமுக.வினர் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

குழப்பத்தில் வேட்பாளர்கள்!

கடந்த 15-ம் தேதி காலை மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டார் தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண். அப்போது தனக்கு ஆதரவளிப்பதாக அழகிரி கூறியதாக அவர் சொன்னார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அதே தொகுதியின் பாஜக கூட்டணி மதிமுக வேட் பாளர் க.அழகுசுந்தரம் அழ கிரியை சந்தித்துப் பேசினார். “தென் தமிழ கத்தை தன் சுட்டுவிரலின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டேன். என் தலைவரிடம் (வைகோ) சொன்னது போலவே எனக்கும் வாழ்த்துச் சொன்னார்” என்றார். ஆக, இவர்கள் இருவரில் யாருக்கு அழகிரி ஆதரவு என்ற குழப்பம் நிலவுகிறது. திமுக வேட் பாளர் வ.வேலுச்சாமி, சத்யசாய் நகரில் வாக்குசேகரிக்கச் செல்லும் போது அழகிரியை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சி யப்பன் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டார். இந்தக் குழப்பம் இன்னும் எதுவரை போகப் போகிறதோ தெரியவில்லை

இன்று ஞானதேசிகன் சந்திப்பு

அழகிரியை செவ்வாய்க்கிழமை (இன்று) சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர். மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகியபோதுகூட, காங்கிரஸ் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருந்தார். அவரை நண்பர் என்ற முறையில் சந்திக்க உள்ளேன். அழகிரியின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கிடைத்தால் நல்லதுதான். அவரிடம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x