Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சார்பில் அர்ப்பணிப்போடு பணியாற்றுவோருக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா- சென்னையில் நாளையும், கோவையில் ஆக.1-ம் தேதியும் நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உடன் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், இந்திய மெடிக்கல் அசோசியேசன் - தமிழ் மாநில பிரிவு, டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாக்கள் சென்னையில் நாளை (ஜூலை 31, சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கும், கோவையில் நாளை மறுநாள் (ஆக. 1, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கும் நடைபெற உள்ளன.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பான அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களை இந்திய மெடிக்கல் அசோசியேசன், தமிழ் மாநில பிரிவு தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருது வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளது. இவ்விருது வழங்கும் விழா, நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையேற்று, விருதுகளை வழங்கி, சிறப்பிக்க உள்ளார். டாக்டர் குகநாதன், டாக்டர் சிஎம்கே ரெட்டி, இந்திய மருத்துவ சங்க தமிழ் மாநில பிரிவுத் தலைவர் பி.இராமகிருஷ்ணன், ‘டெட்டால் பநேகாஸ்வஸ்த் இந்தியா’ சார்பில் கலெக்ட்டிவ் குட் ஃபவுண்டேஷன் மூத்த ஆலோசகர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்புரையாற்ற, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் இயக்குநர் முகமதுகனி நன்றி கூறுகிறார்.

லிம்ரா பயிற்சி மையம்

இந்த விழா பற்றி சென்னை லிம்ராமற்றும் லைம் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் முகமது கனி கூறும்போது, ‘‘லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், அர்ப்பணிப்போடு மருத்துவ சேவையாற்றும் முன்னோடி மருத்துவர்களை உருவாக்குவதில் பல்லாண்டுகளாக சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறது. அதிலும், இந்த கரோனாபோன்ற பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற பணி மிகுந்த பாராட்டுக்குரியது.

தேசிய மருத்துவ தினத்தையொட்டி சிறந்த மருத்துவ சேவைக்காக ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதைப் பெறவுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் எங்கள்நெஞ்சார்ந்த வாழ்த்துகள். லிம்ரா நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவான லைம் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் தொடர் உழைப்பால் வெற்றி பெற்று, நிறுவனத்துக்கு பெருமை சேர்த்திருக்கும் இளம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இந்த நிகழ்வை இணைந்து நடத்துவதில் லிம்ரா நிறுவனம் பெருமை கொள்கிறது’’ என்றார்.

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா

இந்நிகழ்வில் இணைந்திருக்கும், ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ என்பது நாடு முழுவதும் சுகாதாரம், துப்புரவு, ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ரெக்கிட் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் நல்லெண்ணத் திட்டமாகும். இத்திட்டம்சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள், தொழில்நுட்ப மற்றும் வணிக கூட்டாளிகள் ஆகியோருடன் இணைந்து தாம்சேவையாற்றிய சமூகங்களில் நீடித்துநிலைக்கும் மாற்றத்தை விளைவித்துள்ளது. அதோடு பிபிஇ கிட்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கச் செய்வது மற்றும் ஸ்வஸ்த்யமந்த்ரா முன்னெடுப்பின் வாயிலான தொடர்பாடல் மூலம் நடத்தை மாற்றத்தை விளைவித்தது மூலம் கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டெட்டால் பள்ளி துப்புரவுத் திட்டம் இதுவரை 13 மில்லியன் குழந்தைகளிடம் தாக்கம் செலுத்தியுள்ளது, டிஜிட்டல் மற்றும் இணையத்துக்கு அப்பாற்பட்ட இடையீடுகள் மூலமாக 20 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு விரிவடையவிருக்கிறது. இந்தத் திட்டம், முதலீடு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் 33 ரூபாய்களை முதலீடு மீதான சமூக வருவாயாக ஈட்டியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் பள்ளி வருகையை 17% அதிகரித்துள்ளது, வயிற்றுப்போக்கு நோயை 14.2% குறைத்துள்ளது.

இத்திட்டம் நீடித்து நிலைக்கக்கூடிய நடத்தை அறிவியல் அடிப்படையிலான இடையீடுகளைச் செயல்படுத்தி, மாணவர்களிடையே சுகாதாரம் சார்ந்த திறன்களை வளர்த்தெடுப்பதன் மூலம் அவர்களை வருங்காலத் தலைவர்களாக உருவாக்குகிறது. தொழில்நுட்பம் மற்றும்ஸ்டெம் (STEM) கற்றலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்தத் திட்டம் வைட்ஹாட்ஜூனியர் போன்ற நிறுவனங்களுடன் கூட்டாளியாக இணைந்து, மாணவர்களை சுகாதார வழிமுறைகளை உருவாக்க ஊக்குவிக்கிறது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அர்ப்பணிப்போடு மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்களைப் பாராட்டும் விதமாக, கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலத்திலும் தன் உயிரைப் பொருட்படுத்தாது, களத்தில் நின்று சேவையாற்றிய மருத்துவர்களின் தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ முன்னெடுக்கும் இவ்விருது வழங்கும் விழாவில் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம் என்று ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.

விருது பெறும் மருத்துவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x