தமிழகம்
போலி வாரிசு சான்று தயாரித்து நில மோசடி: திமுக நிர்வாகி உட்பட 8 பேர் மீது வழக்கு
போலி வாரிசு சான்று தயாரித்து நில மோசடி செய்ததாக திமுக நிர்வாகி உட்பட 8 பேர் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த பருத்தி ஆலை உரிமையாளர் பெத்தபெருமாள்(60). இவரது தந்தை சேவுகன் மற்றும் அவரது சகோதரர்களுக்குப் பாத்தியமான குடும்ப சொத்துகள் பிரிக்கப்படாமல் இருந்தன.
அதில் ஆறாவயல் பகுதியில் உள்ள நிலத்தை பெத்தபெருமாளின் உறவினர் வீரப்பன், அரசு முத்திரையுடன் போலி வாரிசு சான்றை தயாரித்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து ஆறாவயல் காவல் நிலையத்தில் பெத்தபெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில் வீரப்பன், அவருக்கு உதவியாக இருந்த தேவகோட்டை வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணிச் செயலாளர் ராமநாதன் உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்
