Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் திருமண மண்டபம்; கந்தசுவாமி கோயிலில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணி: அறநிலையத் துறை அமைச்சர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு, பல்வேறுபணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஈசிஆர் சாலையையொட்டி உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பக்தர்களின் வசதிக்காக திருமண மண்டபம் அமைப்பது, வாகன நிறுத்துமிடம், நந்தவனம் அமைப்பது குறித்துஅறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், திருத்தேருக்கு நிழற்குடை மற்றும் கல்யாண குளத்தை சுற்றிலும் அழகு பூச்செடி அமைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பின்னர், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத திருமண மண்டபத்தை பார்வையிட்டார். பின்னர், பக்தர்கள் தங்குமிடம் மற்றும் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதையடுத்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி விரைவில் இந்த கட்டிங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, சரவணப் பொய்கை குளத்தை பார்வையிட்ட அமைச்சர், திருக்குளத்தின் உள்ளே அனைத்து பகுதியிலும் பக்தர்கள் பாதுகாப்புடன் குளிப்பதற்கான தடுப்புகளை அமைக்க வேண்டும், ஆண், பெண் என தனித்தனியே குளியல் பகுதியை ஏற்படுத்த வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்புடன் கூடிய உடை மாற்றும் அறைகள் அமைக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கோயிலின் வடக்கு மாடவீதியில், பராமரிப்பின்றி காணப்படும், திருமண மண்டப கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர்,கந்தசுவாமி கோயிலுடன், இதைஇணைப்பதற்காக நிர்வாக ரீதியான பரிந்துரை கடிதம் வழங்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ பாலாஜி, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன், உதவி கோட்ட பொறியாளர் குமரகுருபரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு: நித்தியகல்யாண பெருமாள் கோயிலில் திருமண மண்டபம், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளன. கந்தசுவாமி கோயிலில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.2 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x