

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோரை பிடித்து கொடுத்ததால் ஊர் மக்களை மிரட்டுவ தற்காக நாட்டு வெடிக்குண்டு வீசிய 3 சிறுவர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
புதுவை கொம்பாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டில் பால் சொசைட்டி அருகில் வசிப்பவர் மாரிமுத்து (எ) சக்திவேல் (29). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வீட்டினுள் இருந்த சக்திவேலின் குடும்பத்தினர் மற்றும்ஊர்மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வாசலில் புகை மண் டலமாக காட்சியளித்தது. மேலும் தரையில் வெடிமருந்துகளும், ஜல் லிகளும் சிதறிக் கிடந்தன.
சக்திவேல் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை மர்மநபர் கள் வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனே முதலியார்பேட்டை போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் இளவரசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் 3 சிறுவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசார ணையில், கடந்த சில நாட்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள மளிகை கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு, அதில் இருந்தபணம் திருடு போயின. இதை யடுத்து அப்பகுதி மக்கள் கண் காணிப்பில் ஈடுபட்ட போது ஒரு மளிகை கடையில் புகுந்து திருட முயன்ற இரு சிறுவர்கள் பிடிபட்டனர். அதில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடி விட, ஒரு சிறுவன் அவர்களிடம் பிடிபட்டான்.
அந்தச் சிறுவனை சக்திவேல் விசாரித்துள்ளார். மேலும் அவன் யார்? எந்த ஊர்? எங்கெங்கு திருடினான் என விசாரித்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஊர் மக்கள் முதலியார்பேட்டை போலீஸாரிடம் அந்தச் சிறுவனை ஒப்படைத்தனர்.
காவல்நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்கள் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. சிறுவர்களாக இருந்ததால் அவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்து அறிவுரைக்கூறி முதலியார்பேட்டை போலீஸார் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தாங்கள் அவமானப்பட்டதாகக் கருதி சிறுவர்கள் தங்கள் சகோதரனுடன் வந்துசக்திவேலையும், அப்பகுதியினரை யும் மிரட்ட நாட்டு வெடிக்குண்டு வீசி சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று சிறார்களை பிடித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவர்கள் கையில் நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? அதன் பின்னணி என்ன? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.