மதுரை உணவகங்களில் வியாபாரம் 50% வீழ்ச்சி: ‘கரோனா’ அச்சத்தால் பொதுமக்கள் வர தயக்கம்

குமார்
குமார்
Updated on
1 min read

வெளியூர் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் கரோனா அச்சத்தால் வர தயங்குவதால் உணவகங் களில் 50 சதவீத வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மதுரை மாநகரில் ஆயிர த்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் பணிபுரிந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநில தொழிலாளர்கள்.

கரோனா பரவல் குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் ஹோட்டல்கள் வியாபாரம் மட்டும் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

பெரிய ஹோட்டல்களில் 50 சதவீதம் வியாபாரமும், சிறிய ஹோட்டல்களில் 30 முதல் 40 சதவீதம் வியாபாரம் மட்டுமே நடக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருவதால் மதுரைக்கு சுற்றுலா, வியாபாரம், மருத் துவ ரீதியாக வருவோர் எண் ணிக்கையும் குறைந்துவிட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், டெம்பிள் சிட்டி ஹோட்டல்கள் உரிமையாளர் குமார் கூறுகையில், ‘‘ஹோட்டல்களில் 50 முதல் 60 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடக்கிறது. கரோனாவால் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது வரை முழுமையாக வராததால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாடுகிறோம். அனைத்து வகை உணவுப் பொருட்கள் விலையும் கூடி விட்டது. ஏற் கெனவே வியா பாரம் குறைந்து விட்டதால் விலைவாசி உயர்வுக்கு தகுந்தாற்போல் உணவு வகை களின் விலை யை அதிகரிக்க முடியவில்லை.

ஆனால், ஹோட்டல்கள் மூடிக் கிடந்த ஊரடங்கு காலங்களுக்கு மின்சார கட்டணமும், சொத்து வரியும், ஜிஎஸ்டி வரியும் கேட் கிறார்கள்.

குறைந்தபட்சம் ஹோட்டல் தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மின்சார கட்டணம், சொத்து வரி, ஜிஎஸ்டி வரியிலிருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in