

பள்ளிச் சிறுமி கடத்தல் வழக்கில் திருவண்ணாமலை எஸ்.பி. நேரில் ஆஜராகி உரிய பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த வெங்க டேசன் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவில் கூறியிருப்ப தாவது:
எனது மகள் கிருஷ்ணவேணி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். என்னிடம் டிரைவராக பணி புரிந்த சுரேஷை வேலையில் இருந்து நிறுத்தினேன். இந்த ஆத்திரத்தில் சுரேஷ் தனது பெற்றோர் வேலு, பொன்னம்மாள், சகோதரர் முருகன் மற்றும் நண்பர்கள் முகுந்தன், பாலாஜி, பாலமுருகன் ஆகியோ ருடன் 2 கார்களில் வந்து கடந்த 2015 டிசம்பர் 13-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த எனது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென் றனர். உடனே நான் அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத் தரக்கோரி கீழ்கொடுங்கலூர் போலீ ஸில் புகார் செய்தேன். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்பியிடம் முறை யிட்டும் போலீஸார் இன்னும் எனது மகளை கண்டுபிடித்து தரவில்லை. நான் குற்றம்சாட்டிய நபர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் ஊருக் குள் வந்து அரசியல் பின்புலம் இருப்பதாக கூறி எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனது மகள் உயிருடன் இருக்கிறாளா? இல் லையா? என்பது கூட தெரிய வில்லை. எனவே எனது மகளை மீட்டு ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் சரியான பதில் மனு தாக்கல் செய்யவில்லை. கீழ்கொடுங்கலூர் ஆய்வாளர் ஆஜராகாமல் ஒரு போலீஸ்காரர் வந்து அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த ஆட்கொணர்வு மனு கடந்த டிசம்பரில் இருந்து நிலுவையில் இருக்கிறது. பள்ளி செல்லும் சிறுமியை கடத்தியுள்ளனர். பலமுறை வழக்கை ஒத்திவைத்தும் கடத்தப்பட்ட சிறுமி குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக் கையிலும், சிறுமியை மீட்பதற்கான எந்தவொரு உப யோகமான தகவலும் இல்லை. அந்த சிறுமியை பத்திரமாக மீட்க வேண்டிய போலீஸ் எஸ்பி இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 26-ம் தேதியன்று திருவண்ணாமலை எஸ்பி நேரில் ஆஜராகி வழக் கின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.